Saturday, August 13, 2022

பகுதி-12 ஸ்தூல மற்றும் சூட்சும

 சித்தர்கள் கூறிய சித்தவித்தை

💐பகுதி-12💐

🔔மஹாபாரத சகுனி   உருட்டும் தாயக்கட்டை, அவரின் மனது சொல்லுக்கு கட்டுப்பட்டது போல.. நம்மாலும் அந்த மாய வித்தையை செய்யமுடியுமா?

🔔15 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை தொடாமல், அசைப்பது அல்லது தள்ளிவிடுவது சாத்தியமா?

💐சித்தவித்தை, சித்தர் வாக்கு...🙏

பொதுவாக எந்த ஒரு உயிருள்ள அல்லது உயிரற்ற உருவங்களுக்கு (பொருட்களுக்கு) ஸ்தூல மற்றும் சூட்சும என்ற இரண்டு  உருவம்(உடல்) உண்டு

இதில் "சூட்சும உருவம்" என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம், போன்ற செயலால் ஆக்கப்பட்ட கண்ணுக்கு புலப்படாத ஆற்றல்..

"ஸ்தூல" உருவம்/உடல்/சரீரம்.. என்பது, கண்ணுக்கு புலப்படக்கூடிய உயிருள்ள அல்லது உயிரற்ற உருவம்/ பொருள்..

ஸ்தூல உருவத்தை அடிப்படையாக கொண்டு சூட்சும உருவம் அமைந்திருக்கிறது..

சூட்சும உருவத்தை/உடலை மாற்றி அமைக்கும் சக்தி ஸ்தூல உடம்புக்கு உண்டு.. அதுவும் முறையான பயிற்சி மற்றும் சாதகம் செய்தால் மட்டுமே சூட்சும உருவத்தை கட்டுப்படுத்த முடியும்.

நமது சூட்சும-மனம் மற்றும் ஸ்தூல சித்தம் (உடல்) உரிய பயிற்சியினால் மட்டும் வசப்படாது, அதை சரியான பாதையில் வழி நடத்தி செல்ல புத்தி வலுவாக இருக்க வேண்டும்..

இந்த சூட்சுமம் மற்றும் ஸ்தூலம் இவற்றை இணைக்கும் ஒரு பாலமாக இருக்கும் சக்திதான்.. "பிராணன்"(உயிர்).

ஆகவே எந்த ஒரு ஸ்தூல-(உடல்/பொருள்) உறுவத்திற்கும் அதன் சூட்சுமத்தை உணர்ந்து செயல்படுத்த, பிராணன்(உயிர்) அவசியமாகிறது...

ஸ்தூல ஜடப்பொருளான தாயக்கட்டைக்கு, அந்த பொருளின் சூட்சுமத்திற்கு ஏற்றவாறு தனது பிராணத்தை(உயிர்  சக்தியை) தந்தால் அந்த ஜடப்பொருள் உயிர்பெற்று, உயிரைத்தந்த நமது மனம் சொல்லும் பேச்சை அப்படியே கேட்கும் நிலை ஏற்படுவதையே.. சகுனி உருட்டி தாயக்கட்டைகள் அவர் நினைத்ததை செய்தது..

அறிவுக்கு தெரிந்த விவரத்தை செயல்படுத்த உரிய பயிற்சியும், தொடர் சாதகமும் முக்கியம்..

சித்த வித்தையில் முறையான பயிற்சி பெற்றவர்களால் 15 அடி தூரத்தில் நிற்கும் ஒருவரை அல்லது ஒரு பொருளை, நமது கை படாமல் தள்ளிவிட முடியும்..

எந்த ஒரு ஜடப்பொருளுக்கும், பிராணன் என்கிற உயிர்சக்தி கொடுத்தல் அது தானே நகரும்..

கூடு விட்டு கூடு பாய்வதும் இந்த தத்துவத்திலே..👍

மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம், நன்றி, இப்படிக்கு கோகி. ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.

📚📚📚📚📚📚📚📚📚

No comments:

Post a Comment