Saturday, August 13, 2022

சித்த வித்தை :-பகுதி-13 நெற்றிக்கண் / சுழிமுனை பார்வை

 சித்த வித்தை :-பகுதி-13 நெற்றிக்கண் / சுழிமுனை பார்வை

”தன்னில் இருக்கின்றதும் அதோகதியாகி வெளியே பொய்க்கொண்டிருக்கும் ஜீவனை(சுவாசத்தை), அப்படி வெளியே போய் அழிய விடாமல் , தன்னுள்ளே எப்போதும் மேலும் கீழும் நடத்தி , தன்னில் இருக்கின்ற சுழுமுனை வழியே பிரம்மமந்திரத்தை  தட்டித் திறந்து , அதில் ஜீவனை அடக்கி ஆள்வதற்காக, வேண்டி கற்றுக்கொள்வதே சித்த வித்தை ஆகும் ”


வித்தை:- உங்கள் பார்வை திருஷ்டியில் (ஞானக்கண்களில்) எந்த ஒரு உயிரின் அல்லது பொருட்களின் சூட்சுமங்களை எளிதில் தெரிந்துகொள்ளும் சக்தி.

ஒருவரை பார்க்கும்போதே அவரின் மனதை தெரிந்துகொள்ளும் சக்தி, ஒரு ஜடப்பொருளை பார்க்கும்போதே அந்த பொருளின் தன்மையை புரிந்துகொள்ளும் சக்தி, ஒரு இடத்தை / நிலத்தை பார்க்கும்போதே அந்த இடத்தின் அருமை பெருமையை கூறும் சக்தி (உதாரணம்:- இடத்தை பார்த்தவுடன் இங்கு நிறைய தண்ணீர் உள்ளது கிணறு வெட்டுங்கள் என்று கூறும் சக்தி)

சித்த வித்தை பழகிவிட்டால், நாம் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் மந்திரமாக செயல்பட்டுவிடும். விதியை மதி வென்றுவிடும் நிஜத்தையும், கண்கூடாகப்பார்க்கலாம். (நினைத்தது நிறைவேறும்)

அகத்தியர் சித்தரின் பாடல்:-

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே

அகத்தியரின் பாடலை நேரடியாக படிக்கும்போது ஒரு அர்த்தமும் அதன் மறுபக்கத்தை உணர்ந்து தெளிவடையும்போது பாடலுக்கு வேறுஒரு அர்த்தமும் முழுமையாக விளங்கும்.

நேரடியான பொருள்:- மனதை செம்மையாக்கிக்கொண்டாள் மந்திரம் தேவையில்லை என்பது..
ஆகவே மந்திர உபதேசம் தேவையில்லை மந்திரங்களை கூறவேண்டிய அவசியமில்லை என்பதாக தவறான பொருள் போதித்துவிடும்..

நமது மனம் எதை நோக்கினாலும் அதன் மறுபக்கத்தை உணர்ந்து தெளிவடையவேண்டும் என்பதே சித்தரின் நோக்கம், குறிக்கோள்... மேற்குறிப்பிட்ட அகத்தியரின் பாடலிலும் மந்திரம் சொல்லி சொல்லி அது நமது நாடி நரம்புகளில் ஊறி செம்மையானபின்பு, திரும்ப அந்த ஆரம்ப நிலை மந்திரம், சொல்லத்தேவையில்லை அது தானாகவே அனிச்சையாக விஸ்வரூபமாக உயர்ந்து வளர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும்... என்பதாக பொருள் கொள்ளவேண்டும்.

உதாரணம்:- ஒன்றாம் வகுப்பில் அ, ஆ. இ, ஈ... என்பதை மனதளவில் சொல்லிப்பழகிவிட்டால் 10ம் வகுப்பில் படிக்கும்போது அ, ஆ. இ, ஈ...என்று சொல்ல தேவையிருப்பதில்லை அது தானாகவே வளர்ந்து உயர்ந்து தனது விசுவரூப நிலையை எட்டிப்பிடித்திருக்கும்...  ஆகவே சிறப்பான எந்த ஒரு சிந்தனையும், செயலும் நமது (அடிமனதில் ) நாடி நரம்புகளில் கலந்துவிட்டால் திரும்ப அவற்றைபற்றி நினைக்க தேவையில்லை அது தானாகவே தனது விசுவரூப நிலையை எட்டிப்பிடிக்கும்.

நாம் இதுவரை தெரிந்துகொண்ட அனைத்து பாட வகுப்புகளும் இதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. அந்த அந்த பாடங்களை நீங்கள் சிறப்பாக உங்களின் உள்மனதால் உணர்ந்திருந்தால், தற்போது உங்களுக்கே தெரியாமல் உங்களின் ஆற்றல், மிகப்பெரிய விஸ்வரூப நிலையாக வளர்ந்துகொண்டிருக்கும் நிலையை உங்களால் உணரமுடியும்.. ஆகவே முதல் நிலையில் கற்ற பாடங்களை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த தேவையிருக்காது...

நன்றி மீண்டும் அடுத்த பாடத்தில் வேறு ஒரு புதிய நிலையை எட்டிப்பிடிக்கலாம்.
நன்றிகளுடன் கோகி ரேடியோமார்க்கோணி புது தில்லியிலிருந்து 

No comments:

Post a Comment