Saturday, August 13, 2022

Lesson-3, பாடம்-3 🙏முத்திரைகள்🙏

 


✅📚📚📚📚📚📚📚📚📚📚✅
💐Meditation தியானம்💐
📚👃Lesson-3, பாடம்-3👃📚

🧘‍♀️🧘‍♂️ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்🧘‍♂️🧘‍♀️

🙏முத்திரைகள்🙏

"அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது"

மனித உடலானது ஒரு குறிப்பிட்ட விகித அளவில் பஞ்ச பூதங்களின் கலவையாக உள்ளது. இந்த மூலங்களை உடம்பிலிருந்து வேறு படுத்த முடியாது. இந்த பஞ்சபூத கலவையின் விகித அளவுகள் மாறது பேணப்படுவதன் மூலமே யோகம் சித்திக்கும் என்று சொல்லும் சித்தர்கள். அந்த விகித அளவுகளில் ஏற்படும் மாற்றங்களே மனிதர்களுக்கு உடல் நலிவையும், நோயையும் உருவாக்குகின்றன என்கின்றனர்.

முத்திரை பயிற்சிக்கு கை விரல்களே மூலதனமாகும். இம்முத்திரைகள் பற்றி தன்வந்திரி தன்னுடைய தன்வந்திரி வைத்தியம் 1000 என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பெருவிரல்=நெருப்பு, ஆள்காட்டி/சுட்டுவிரல்=காற்று, நடுவிரல்=ஆகாயம், மோதிரவிரல்= நிலம்,  சுண்டுவிரல்=நீர்

இந்த பஞ்ச பூத கலவையின் விகிதாசாரங்களை மாற்றம் அடையாது ஒரு சீரான சம நிலையில் வைத்திருக்க சித்தர்களால் அருளிய முறைகளில் ஒன்றுதான் முத்திரைகளாகும்.

இவற்றை இரண்டு வகைகளாக வகுத்துள்ளனர் ஒன்று ”யோக முத்திரைகள்” மற்றயது மருத்துவ முத்திரைகள் எனப்படும் ”தேக முத்திரைகள்”. இந்தத் பயிற்சியில் நாம் பார்க்கப் போவது யோக முத்திரைகள் பற்றியே...!

தன்வந்திரி தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்கிற நூலில் யோக முத்திரைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

சுத்தமுள்ள முத்திரைகள் தன்னிலேதான்

சுகமான ஆறுவகை முத்திரைகள் நன்று

பக்தியுடன் ஆறுவகை முத்திரையினாலே

பகுத்தறிந்து ஆதார தெரிசனைகள் பெற்று

வித்தான பிறவிதனை நன்றாய் நீக்கி

வேதாந்த பூரணமாய் விளங்கு முக்தி"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

யோக முத்திரைகளில் பல வகை இருந்தாலும் தனித்துவமான சிறந்த முத்திரைகள் ஆறு உள்ளன என்றும், இவற்றை தவறாது செய்பவர்களுக்கு பிறவித் துன்பம் நீங்கி வேதாந்த பூரணமாய் முக்தி நிலை கிட்டும் என்கிறார்.

1.மோகினி முத்திரை, 2.சோபினி முத்திரை, 3.திருவினி முத்திரை, 4.யோனி முத்திரை, 5.அபான முத்திரை, 6.சுவகரண முத்திரை முதலிய ஆறு முத்திரைகளையும் "சித்தியுள்ள முத்திரைகள் ஆறு" என்கிறார் தன்வந்திரி.

இந்த யோக முத்திரைகளை வரிசை தவறாமல் பிரம்ம முகூர்த்தத்தில், ஒரு முத்திரைக்கு ஏழு நிமிடங்கள் வீதம் மொத்தமாக நாற்பத்தியிரண்டு நிமிடங்கள் செய்தல் வேண்டு என்கிறார். இந்த முத்திரைகளை செய்வதில் கை விரல்களே அதி முக்கியமானது என்று குறிப்பிடுகிறார்.

யோக முத்திரைகள் செய்வதற்கு தூய்மையும், அமைதியும் நிறைந்த இடத்தில் உடலை தளர்த்தி இரண்டு கைகளையும் முழங்கால் மீது தளர்வாக வைத்து யோக முத்திரைகளை பிடிக்க வேண்டுமென தன்வந்திரி குறிப்பிடுகிறார்.

பிரபஞ்ச சக்திக்கு நன்றி, வாய்ப்புக்கு நன்றி..

வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.

மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்...நன்றி🙏👍

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment