Saturday, August 13, 2022

Meditation தியானம், Lesson-2, பாடம்-2

 


✅📚📚📚📚📚📚📚📚📚📚✅
💐Meditation தியானம்💐
📚👃Lesson-2, பாடம்-2👃📚

🧘‍♀️🧘‍♂️ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்🧘‍♂️🧘‍♀️

*🙏ஆசனம்🙏*

ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை', 'தரைவிரிப்பு', என்பது பொருள். மற்றும் யோகாசனத்தில் ஆசனம் என்பது உடல் நலத்திற்க்காகவும் மனதின் ஒருமைப்பாட்டிற்காகவும் படுத்து, நின்று, அமர்ந்து செய்யும் உடற்பயிற்சியை குறிப்பிடுவது ஆகும்.

ஆழ்நிலை தியானத்தின்போது குறைந்தபட்சம் ஒரு இருபது நிமிடமாவது ஒரு இடத்தில் கண்மூடி அமைதியாக அமர்வதற்கு தேவைப்படும் உட்க்காரும் மரப்பலகை  அல்லது  தரைவிரிப்பு.

தவமிருக்கும் முனிவர்கள் புலித்தோலின் மீது அமர்ந்து தவம் செய்வது அவர்களின் தவத்திற்கு எந்த மிருகங்களின் பறவைகளின் தொந்தரவும் வந்துவிடக்கூடாது என்பதற்கு விலங்குகளை பயமுறுத்தும் புலித்தலை கொண்ட தோலை பாயாக விரித்து அதன்மீது அமர்ந்து தவமிருந்ததாக குறிப்பு உள்ளது. அதோடு வெப்பம் மழை குளிர் காலங்களிலும் எந்தவித காலநிலையினால் பாதிக்காமல் தான் அமர்ந்த இடமும் நிலையம் இருக்க புலித்தோல் பாய்விரிப்பு உதவியாக இருந்தது என்கிற குறிப்பும் உள்ளது.

ஆகவே ஆசனம் என்பது நாம் வசதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவதற்க்கே

உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். யோகாசனம்= யோகா+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள்

பிரபஞ்ச சக்திக்கு நன்றி, வாய்ப்புக்கு நன்றி..

வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.

மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்...நன்றி🙏👍

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment