Saturday, August 13, 2022

Lesson-6, பாடம்-6 பிரணவமும் பிராணமும்

 


✅📚📚📚📚📚📚📚📚📚📚✅
💐Meditation தியானம்💐
📚👃Lesson-6, பாடம்-6👃📚
🕉️பிரணவமும் பிராணமும்🕉️

🧘‍♀️🧘‍♂️ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்🧘‍♂️🧘‍♀️

பயிற்சியில் இதுவரை:-
1.சங்கல்பம், 2.ஆசனம், 3.முத்திரை, 4.தியானம், 5.🔔மணி, 📿மந்திரம், 🧘‍♀️🧘‍♂️தியானம்

இன்றைய பயிற்சி வகுப்பில்..

6.🕉️பிரணவமும் பிராணமும்🕉️

🧘‍♀️அமிர்த நாடியை  உயிர்பிப்பது🧘‍♀️

மந்திர தியானத்திற்குப் பயன்படுத்தப்படும் சொற்களில் முதலிடம் வகிப்பது ”ஓம்”. என்கிற பிரணவ மந்திரமும் அதோடு பிராணாயாமமும் (மூச்சு பயிற்சியும்)சேர்ந்து செய்யும் பயிற்சி

பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். சிலர் பிராணனை தெய்வீக சக்தியாகவும் பார்ப்பதுண்டு. ஆகவே நமது தெய்வீக சக்தியில் வேலை செய்வது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

பிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது?

ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம்.

மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம்.. ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். மூச்சை உள்ளெடுப்பது-வெளியே விடுவது தவிர, உள் மூச்சுக்குப்பின் நிறுத்துவது, வெளி மூச்சுக்குப்பின் நிறுத்துவது, மூச்சின்போது எண்ணிக்கையைப் பயன்படுத்துவது, அதை மெல்ல மெல்ல அதிகப்படுத்துவது, மூச்சின்போது ஒலியைப் பயன்படுத்துவது, மூச்சோடு பிரணவ மந்திரங்களைப் பயன்படுத்துதல்… என்று நிறைய முறைகள் உள்ளன.

இந்த பயிற்சியின் சாதாரண பலன்கள் என்று சொன்னால் தியானத்திற்கும்  வாழ்வின் தெளிவான பார்வைக்கும் பிராணாயாமம் ஒரு முக்கிய காரணமாக திகழ்கிறது. இந்த பயிற்சியின் நிலையில்தான் உங்கள் மனதின் சக்தி பீடம் தூண்டப்படுகிறது. அதனால் மாபெரும் உணரும் சக்தி நம் மனதுக்கு கிடைக்கிறது.

மாபெரும் உணரும் சக்தி என்றால் என்ன?

உங்களது இதயத்தின் லப் டப் சப்தத்தை கேட்பதற்கும் அந்த சப்தத்தை உணருவதற்கும் உள்ள வேறுபாடு. இதை நன்கு உணர்ந்து கொண்டால்தான் நாம் அடுத்த பயிற்சிக்கு செல்லமுடியும்.
(பயிற்சி ஆடியோ கேளுங்கள்) 

🧘‍♀️எப்போதும் தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்.🧘‍♂️

❌அடுத்த பயிற்சி வகுப்பிலிருந்து சுவாசத்தை பற்றிய தெளிவு மற்றும்  "சுழிமுனை" சுவாச விழிப்புணர்வு பயிற்சி... அதோடு 👃மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்களை பயிற்சியில் பெறலாம்.

பிரபஞ்ச சக்திக்கு நன்றி, வாய்ப்புக்கு நன்றி..

வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.

மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... உபயோகமான பயிற்சிகளில் மேலும் பயணிப்போம். நன்றி🙏👍

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

🙏தியானமும் மந்திர ஜெபமும்🙏

     📚(அம்ருத நாடி)📚

நம்முடைய ஆச்சார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி'யில் ஒரு சுலோகத்தில்  அம்பாளை சகல அவயங்களிலிருந்தும் அம்ருத ரஸ கிரணங்கள் பெருகுகிற சந்திர காந்த சிலா வர்ண மூர்த்தியாக தியானம் செய்வதால் ஒருத்தன் கருடனைப் போலப் பாம்பு விஷத்தை சமனம் செய்கிற சக்தி பெற்றுவிடுகிறானென்றும், இப்படிப்பட்டவனுக்கு அம்ருத நாடி என்று உண்டாகி அதன் பின் இவனுடைய திருஷ்டி பட்டாலே பிறரின் ஜ்வரதாபம் இறங்கிவிடுமென்றும் சொல்லியிருக்கிறார். இந்த சுலோக ஜபத்தாலேயே விஷம், ஜ்வரம் முதலியவைகளை நிவ்ருத்தி செய்துவிட முடிகிறது.

‘ஸெளந்தர்ய லஹரி'யின் வேறு பல சுலோகங்களை ஜபிப்பதற்கும் இவ்வாறு பலவிதமான வியாதி நிவிருத்தி சக்தி இருக்கிறது. நாராயண பட்டத்திரி ‘நாராயணீயம்' பண்ணியே அவருடைய வயிற்று உபாதை நீங்கியதால் அதையும் நோய் தீருவதற்காகப் பாராயணம் பண்ணுகிறார்கள். “இருமலுரோக முயலகன் வாத” என்று ஒரு திருப்புகழ் உண்டு. அதுவும் சர்வ வியாதி நிவ்ருத்திக்காக ஜபிக்கப்படுகிறது. சம்பந்தமூர்த்தி சுவாமிகள் கூன்பாண்டியனை ஸ்வஸ்தப்படுத்துவதற்காகச் சொன்ன திருநீற்றுப் பதிகத்தையும் பல ஆவிருத்தி ஜபித்து விபூதி இடுவதுதுண்டு.
✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

No comments:

Post a Comment