Saturday, August 13, 2022

Lesson-4, பாடம்-4 தியானம்

 


✅📚📚📚📚📚📚📚📚📚📚✅
💐Meditation தியானம்💐
📚👃Lesson-4, பாடம்-4👃📚

🧘‍♀️🧘‍♂️ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்🧘‍♂️🧘‍♀️

🙏🧘‍♂️தியானம்🧘‍♀️🙏

என்னால ஒரு நிமிஷம் கூட கண்ண மூட முடியலயே, என் மனம் என் கட்டுப்பாட்டுலேயே இல்லை, எனக்கு போய் தியானம் வருமா? இதுபோன்ற கேள்விகள் இல்லாமல் தியானம் கற்றுக் கொள்ள வந்தவர்கள் வெகு குறைவு.

முழுமையான தியானம் என்றால் மனம், புத்தி, பிராணசக்தி, ஆத்மா ஆகிய நான்கும் ஒன்றாகி தியானம் செய்தால் பேராற்றல் மிகுந்த ஒரு சக்தி (பிரபஞ்ச ஆற்றல்) நம்மிடம் வந்து சேரும்.

தியானத்தின் நிலைகள் -3,  முதலில் ஆர்த்த தியானம், பிறகு வருவது தர்ம தியானம், இறுதியில் கிடைப்பது சுக்கில தியானம் இதுதான் தூயதியானம்.

முதலில் தியானம் செய்பவர்கள் எப்போதுமே "MAT-மேட்" எனும் தரை விரிப்பை, உட்க்காரும் ஆசனமாக பயன்படுத்திதான் தியானம் செய்யவேண்டும் என்பதை முதல் பாடத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.

தியானத்தின் போது கற்பனை செய்யலாமா?  வேண்டாம். தியானத்தின்போது கற்பனைகள் பயன்படுத்த வேண்டாம். கற்பனை உங்களது சக்திகளை வீணடித்துவிடும். உங்களுடைய ஞாபகசக்தி கற்பனைசக்தி இரண்டும், இரு வலைப்பொறிகள். ஒரு கால் ஞாபக சக்தியிலும் இன்னொரு கால் கற்பனையிலும் சிக்கிக் கொண்டு இருக்கிறது. இவற்றிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டால், தியானம் இயற்கையாகவே நிகழும். உங்களது நெற்றியில் ஒரு 3வது கண் திறக்கட்டும் என்கிற நிலையில் உங்களது எண்ணங்களை நெற்றிப்பொட்டில் குவியுங்கள்...தியானத்தில் முக்கியமான செயலாக உங்க சுவாசத்தை கவனியுங்கள். உங்க வாய், வயிறு அல்லது மூக்கு வழியாக காற்று செல்வதை கவனியுங்கள். ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து உங்க வயிற்றை விரிவடைய செய்து மெதுவாக வெளியே விடுங்கள். 2 நிமிடங்கள் மூச்சு பயிற்சியும் செய்யுங்கள். தியானத்தின் போது மந்திரங்களை ஓதுவது சிறப்பாக கூறப்படுகிறது. தியானத்துடன் தொடர்புடைய பிரபலமான, பொதுவான மந்திரம் என்று பார்த்தால் "ஓம்" என்பது தான். ஓம் என்று சொல்லும் போது அதன் ஓங்காரம் உங்க மனதுக்குள்ளே ஒரு அமைதியான உணர்வை ஏற்படுத்துகிறது.

தியானம் செய்வதற்கு ஏற்ற இடம்:- ஒரு அமைதியான சூழல் கொண்ட இடம் தியானத்திற்கு ஏற்ற இடம். வீட்டின் தனி அறை, ஆற்றங்கரை, மலை, குகை, காடு, கோயில் போன்ற தனியிடங்களில் அமர்ந்து தியானம் செய்யலாம்.

தியானம் செய்வதற்கான நேரம்:- ஆரம்பத்திர் 5-10 நிமிடங்கள் எனத் தொடங்கி, நேர வரம்பை நிர்வகிக்கவும். உங்க நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டுங்கள் அதிகபட்சம் 30 நிமிடங்கள் செய்யலாம்

அடுத்த பயிற்சி வகுப்பில்  "🔔மணி - 📿மந்திரம் - 🧘‍♀️தியானம்" என தியானத்தை தொடங்கும் சிறப்பு பயிற்சிகள்...

பிரபஞ்ச சக்திக்கு நன்றி, வாய்ப்புக்கு நன்றி..

வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.

மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்...நன்றி🙏👍

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment